28.9 C
Chennai
April 25, 2024
விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் துவக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் துவக்க போட்டி டி ஒய் பாடில் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் இன்னிங்சில் அதிரடி துவக்கம் கொடுத்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 207 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும் விளாசினர்.

அதன் பின் 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி நிதானமான துவக்கத்தை கொடுக்க, அந்த அணியின் கேப்டன் பெத் மூனி 3 பந்துகளே எதிர்கொண்டிருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 15.1 ஓவர்களிலேயே மீதம் உள்ள 9 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது குஜராத் அணி.

சிறப்பாக பந்துவீசிய சைகா இஷாக் 4 விக்கெட்டுகள், அமெலியா கெர், நட் சைவர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading