முக்கியச் செய்திகள் இந்தியா

தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்: முதல் பணியே இதுதான்!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை முறைப்படி பதவியேற்க இருக்கிறார்.

கடந்த 1957ம் ஆண்டு மே 15ம் தேதி பிறந்த சுஷில் சந்திரா, உத்ராகண்ட் மாநிலம் ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்பும், டேராடூன் டிஏவி கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.

தொடர்ந்து 1980ம் ஆண்டு இந்திய வருவாய் நிர்வாக துறையிலும் பணியைத் தொடங்கிய அவர், பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். 2019 பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பதவியேற்றதும் மேற்கொள்ளும், முதல் முக்கிய பணியாக 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க உள்ளார் சுஷில் சந்திரா.

இவர் வரும் 2022 மே 14ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார். கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களின் தேர்தல்கள் இவரது கண்காணிப்பின் கீழ் நடைபெறும்.

Advertisement:

Related posts

ட்விட்டருக்கு அபராதம் விதித்த ரஷ்யா!

Dhamotharan

பொதுத்துறை வங்கிகளை நண்பர்களுக்கு விற்கும் மோடி: ராகுல்காந்தி ட்வீட்!

Jeba

ஆக்சிஜன் குறித்த பிரச்னைக்கு கால் சென்டரை அமைத்தது தமிழக அரசு!

Ezhilarasan