நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 3 டி 20 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டிகளையும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை வாஸ் அவுட் செய்தது. இதையடுத்து இரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் கான்பூரில் தொடங்க உள்ளது. அடுத்த போட்டி டிசம்பர் 3ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காயம் காரணமாக இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணி வீரர்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி. 1. ரகானே (கேப்டன்), 2. மயங்க் அகர்வால், 3. புஜாரா (துணைக் கேப்டன்), 4. ஷுப்மான் கில், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. சூர்யகுமார் யாதவ், 7. விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), 8. கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), 9. ஜடேஜா, 10. அஸ்வின், 11. அக்சார் பட்டேல், 12. ஜெயந்த் யாதவ், 13. இஷாந்த் சர்மா, 14. உமேஷ் யாதவ், 15. முகமது சிராஜ், 16. பிரசித் கிருஷ்ணா.