30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் விஜய்சேதுபதி மகன்!

நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி, ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்து இந்தி திரையுலகிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் 2ம் பாகத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு ‘பீனிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

மேலும், பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராஜலட்சுமி அரசகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading