சர்வைவல் திரில்லர் படத்தில் #MasterMahendran… டைட்டில் வெளியானது!

நவீன் கணேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘பல்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். அதன் பிறகு ஒரு…

Survival thriller #MasterMahendran...title released!

நவீன் கணேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘பல்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பும் கிடைக்கவில்லை. இந்த சூழலில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். இதில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார்.

இந்த நிலையில், மாஸ்டர் மகேந்திரன் தற்போது நவீன் கணேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரிஷிகா கபூர், ஆர்.வி. உதயகுமார், பழ கருப்பையா, டி.எம். கார்த்திக், கூல் சுரேஷ், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘பல்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ரவிவர்மா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு அபிஷேக் AR இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சர்வைவல் திரில்லர் ஜானரில் உருவாகிவரும் இத்திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.