சூர்யாவின் 43-வது திரைப்படம் – பாடல் உருவாகும் பணிகள் தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 43-வது திரைப்படத்திற்கான பாடல் உருவாகும் பணிகளை துவங்கியுள்ளனர். நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை  சுதா கொங்காரா இயக்குகிறார். முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான…

நடிகர் சூர்யாவின் 43-வது திரைப்படத்திற்கான பாடல் உருவாகும் பணிகளை துவங்கியுள்ளனர்.

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை  சுதா கொங்காரா இயக்குகிறார். முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.

மேலும் இப்படக்குழு படத்தின் அறிவிப்பு விடியோ ஒன்றை வெளியிட்டது. இதில்,  போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970, 80களில் நடக்கும் படமாக உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது.

இதையும் படியுங்கள் : நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தேசிய பேரிடராக கருதி நிதி வழங்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான பாடல் உருவாக்க பணிகள் துவங்கியுள்ளது. படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி தீயை ஒரு பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சுதா கொங்காராவுடன் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.