சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவிற்கு மாற்ற வேண்டும் என ரகு கணேஷ் என்ற காவலர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கருத்தையும் கேட்க விரும்புவதால் இரண்டு வாரத்தில்
தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை கோடை விடுமுறைக்கு பிறகு
எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளதால், இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது மனுதாரர் ரகு கணேஷ் தரப்பு வழக்கறிஞர், அதுவரை நீதிமன்றத்தில்
நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.







