30 லட்சம் ஐ.டி ஊழியர்களின் வேலை பறிபோக வாய்ப்பு!

ஆட்டோமேஷன் மிக விரைவான வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், 2022க்குள் உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வேலையை ஆட்டோமேஷனிடம் இழக்க நேரிடும் என பாங்க் ஆஃப் அமெரிக்கா…

ஆட்டோமேஷன் மிக விரைவான வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், 2022க்குள் உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வேலையை ஆட்டோமேஷனிடம் இழக்க நேரிடும் என பாங்க் ஆஃப் அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது . இது 10,000 கோடி ரூபாய் அளவிற்கு மிச்சப்படுத்த உதவும் எனவும் அவ்வறிக்கையின் மூலம் கூறியுள்ளது.

சுமார் 90 லட்சம் ஊழியர்கள், குறைந்த திறமைக்கான வேலைகளில் மற்றும் பிபிஓ-வில் பணியாற்றுகின்றனர் என்றும் இதில் 30 லட்சத்திற்கும் மேலானோர், 2022க்குள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று தொழில்துறை சங்கம் நாஸ்காம் தெரிவித்துள்ளது. மேலும், ஏறக்குறைய 7 லட்சத்திற்கும் மேலானோர், ரோபோடிக் ஆட்டோமேஷன் செயல்முறையின் தாக்கத்தினாலும், இதர தொழில்நுட்ப மேம்பாடுகளினாலும் தங்களின் வேலைகளை இழக்க நேரிடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல், டெக் மஹிந்திரா மற்றும் காக்னிசண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ரோபோடிக் ஆட்டோமேஷன் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக 2022 ஆண்டுக்குள் 30 லட்சத்திற்கும் மேலான ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது 10,000 கோடி ரூபாய் அளவிளான, சம்பளம் மற்றும் பிற செலவுகளை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் மறுபுறம், ரோபோடிக் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் ஐடி நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் வரத்தை வழங்க உதவும் என அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.