அரசின் ‘வலிமை’ சிமெண்ட் சந்தையில் விற்பனைக்கு வரும்போது சிமெண்ட் விலை குறையும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, சிமெண்ட் விலையேற்றத்தினால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஜூன் மாதத்தில் 490 ரூபாயாக உயர்ந்த சிமெண்ட்டின் விலை, அரசின் தொடர் நடவடிக்கையால் தற்போது 420 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்
மேலும், அரசின் டான்செம் நிறுவன ஆலைகள் மூலம் 18 டன் சிமெண்ட் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வலிமை பெயரில் வரவுள்ள அரசு சிமெண்ட் சந்தைக்கு வரும்போது வெளி சந்தையில் சிமெண்ட்டின் விலை குறையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.







