சசிகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து ஜெய், சமுத்திர கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்து அசத்தி இருந்தனர். மேலும் இந்த படத்தில் வரும் துணை கதாபாத்திடங்களும் நம் நினைவில் இருக்கும் வகையில் மொக்கச்சாமி என்ற கதாபாத்திரத்தில் முருகன் நடித்திருப்பார். மதுரையில் இலைக்கடை வைத்திருக்கும் இவருக்கு இலக்கடை முருகன் என்ற பெயருண்டு.
இந்த நிலையில் இலைக்கடை முருகன் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(ஜூன்.04) சிகிச்சை பலனின்றி மதியம் 3 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.








