முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய பட அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மகள் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படபூஜை இன்று தொடங்கியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநனர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என சமீபத்தில் செய்தி வெளியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்தின் போஸ்டரை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள இதில், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான பூஜை சென்னை எம்.ஆர்.சி. நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள்  கலந்து கொண்டனர்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்புடன், அந்த படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாடி, படத்தின் போஸ்டரை தற்போது சமூக வலைதலங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தலைநகர் டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை : விவசாய சங்கங்ள்

Niruban Chakkaaravarthi

அம்மா மினி கிளினிக்; அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

G SaravanaKumar

கேரளாவில் 34.13% வாக்குப்பதிவு!