முக்கியச் செய்திகள் உலகம்

கணவன்-மனைவி ஒன்றாக உணவருந்த தடை!!!

ஆப்கானிஸ்தானில்  உள்ள உணவகங்களில் கணவன்- மனைவி ஒன்றாக அமர்ந்து உணவருந்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள், தலை முதல் கால் வரை முழுமையாக மூடும்படியான பர்தா அணிந்து வெளியே வரவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஹெராத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் மேலாளர் அங்கு உணவருந்த வந்த தம்பதியை தனித்தனியாக உட்கார சொன்னதாக ஆப்கன் பெண் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதனை மேற்கோள்காட்டி, ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, உணவகங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக அமர வேண்டும் எனவும், கணவன் – மனைவியாக இருந்தாலும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறம் மற்றும் துணைத் தடுப்பு அமைச்சகத்தின் தலிபான் அதிகாரியான ரியாசுல்லா சீரத் கூறுகையில், ஹெராட்டின் பொதுப் பூங்காக்கள் பாலின ரீதியாகப் பிரிக்கப்பட வேண்டும், ஆண்களும் பெண்களும் தனித்தனி நாட்களில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெண்களை பூங்காக்களுக்குச் செல்லவும், மற்ற நாட்கள் ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக ஆண்கள் செல்லவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது, ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்வி

Arivazhagan CM

ஆண்டிராய்ட் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

Saravana Kumar

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி தடுமாற்றம்

Gayathri Venkatesan