முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா பரிசோதனை; திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு பயணிகளுக்கு தொற்று பரிசோதனை தேவையில்லை எனவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்கள் வயது மற்றும் இணை நோயினால் ஆபத்து இல்லாதவர்களாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், சளி, காய்ச்சல், தொண்டை வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, மூச்சுத்திணறல் மற்றும் பிற சுவாச அறிகுறிகள் இருந்தல் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் தொடர்பில் இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் மற்றும் வான் வழியாக வரும் சர்வதேச பயணிகள் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விமர்சனம்: கார்த்தியின் “விருமன்” திரைப்படம் எப்படி உள்ளது?

Web Editor

வெளியானது நெஞ்சுக்கு நீதி; கொண்டாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள்

Arivazhagan Chinnasamy

கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

Gayathri Venkatesan