முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. 10-ம் வகுப்புக்கு வரும் 30-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு வரும் 31-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு வரும் 28-ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவடைகிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் ஜூன் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஜூன் 23-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதேபோல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதியும், 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 17-ம் தேதியும் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதர வகுப்பினருக்கான ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஆகியவை வரும் 13-ம் தேதியுடன் முடிவடையும் என்றும், அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பின் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படுவதாகவும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவுக்கு எதிராக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்

Halley Karthik

27 மாவட்டங்களில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன!

Ezhilarasan

சுவேந்து, சொலிசிட்டர் ஜெனரல் சந்திப்பு; மே.வங்கத்தில் கிளம்பும் சர்ச்சை!

Halley Karthik