சுல்தான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சுல்தான். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இதற்கு முன்னர் இயக்கிய ரெமோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இநிநிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, படத்தின் டிரைலர் வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கார்த்தியின் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்ரனர்.







