சென்னை கே.கே நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!!

சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் லாரி, கார்கள், ஆட்டோக்கள் என எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து…

சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் லாரி, கார்கள், ஆட்டோக்கள் என எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் லாரி, கார்கள், ஆட்டோக்கள் என எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Imageஓட்டுநர் பயிற்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, இதர நான்கு சக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பேருந்து, ஒரு லாரி, ஒரு டாடா மேஜிக், இரண்டு கார், இரண்டு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்து வருகிறது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் கைப்பற்றப்பட்டு வட்டாரப் போக்குவரத்து மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வானங்கள், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 20 நிமிடங்கள் போராடிய தீயை அணைத்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.