ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – 4.3 ரிக்டர் அளவாக பதிவு!

ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மதியம் 1.20 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலையில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில்,

“15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.52 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.