மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்: கிரண் ரிஜிஜு-க்கு பதில் சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம்!

மத்திய அமைச்சரவை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜிஜு வசம் இருந்த சட்ட அமைச்சகம் அர்ஜுன் ராம் மேக்வால் வசம் ஒப்படைக்கப்பட்டது.  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை…

மத்திய அமைச்சரவை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜிஜு வசம் இருந்த சட்ட அமைச்சகம் அர்ஜுன் ராம் மேக்வால் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சட்ட அமைச்சகம் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக இதற்கு முன் பதவி வகித்தார்.

சட்ட அமைச்சராக இருந்து கொண்டு நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பிற்கு எதிராக கிரண் ரிஜ்ஜு தொடர்ந்து பேசி வந்த நிலையில், அவரது சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.