அடுத்தடுத்து சரிந்த முக்கிய விக்கெட்கள் – ராஜஸ்தான் அணிக்கு போராடி 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

அடுத்தடுத்து சரிந்த முக்கிய விக்கெட்களால் ராஜஸ்தான் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி போராடி 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில்…

அடுத்தடுத்து சரிந்த முக்கிய விக்கெட்களால் ராஜஸ்தான் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி போராடி 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 7போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஆறு போட்டியில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

அதேபோல 7போட்டிகளில் விளையாடி 4தோல்வி மற்றும் 3போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6புள்ளிகளைப் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்குகினர்.

ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் திணறினர். ரோஹித் சர்மா 6ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மட்டும்  நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த வந்த வீரரான நேஹல் வதேரா 49ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்கள் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 180ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.