புத்தகப் புழுவாக மாணவர்கள் இருக்கக் கூடாது – அமைச்சர் பொன்முடி

புத்தகப் புழுவாக மாணவர்கள் இருந்துவிடாமல் சமுதாயத்தைப் பற்றியும், பொது அறிவு பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி…

புத்தகப் புழுவாக மாணவர்கள் இருந்துவிடாமல் சமுதாயத்தைப் பற்றியும், பொது அறிவு பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி
துறை அமைச்சர் பொன்முடி 18 அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 3,034 மாணவர்களுக்கு
ஒரு கோடியே 49 ஆயிரம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதால் திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின்
நடத்தி வருகிறார். புத்தகப் புழுவாக மட்டுமாக இருந்துவிடாமல் சமுதாயத்தைப்
பற்றியும், பொது அறிவினைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளியின் பிள்ளைகள் தான் அதிகம் அரசுப் பள்ளியில் கல்வி கற்கின்றனர். பெண்கள் கல்வி பயின்றால் தான் நாடு முன்னேறும். கிராமப்புற மாணவர்கள்
உயர்கல்வி பயில வேண்டும். இந்தியாவிலேயே 53 சதவீதமாக தமிழகம் உள்ளதை 73
சதவீதமாக மாற்ற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொதுத்தேர்வு, 10 ஆம் வகுப்பு, 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இருந்தால்போதும் அதை தான் நங்கள் பின்பற்றுகிறோம். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கச் சொன்னவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மாணவர்களிடையே உரையாற்றியபோது, மின்சாரம் தடைபட்டதால், தான் ஒரு பேராசிரியராக இருந்த காரணத்தினால் மாணவர்களுக்கு மைக் இல்லாமல் பாடம் நடத்திய அனுபவம் உண்டு என்பதால் மின்சாரத் தடையைப் பற்றி கவலை இல்லை என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.