மாணவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் – கனிமொழி எம்.பி.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் திறமைகள் உள்ளது என்றும், எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.   சென்னை மயிலாப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுசார் மற்றும்…

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் திறமைகள் உள்ளது என்றும், எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

 

சென்னை மயிலாப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுசார் மற்றும் கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, மாமன்ற உறுப்பினர்கள், எம்ஜிஆர் ஜானகி கல்லூரி தாளாளர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., இந்த நிகழ்ச்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். எங்கள் மயிலாப்பூர் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளது. சொல்லும் போது வரும் உணர்வு வேறு எங்கும் வராது. மிக பழமையான கோயில், தேவாலயம், மசூதி இங்கு உள்ளது. இது திருஞான சம்பந்தர் பாடிய தளம் என்றார்.

சிட்டி சென்டர், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் உள்ளன. பழமை புதுமை என எல்லாம் இருக்கும் ஒரு இடம் மயிலாப்பூர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வோன்று தான் இருக்கும். ஆனால் இங்கு தான் எல்லாம் இருக்கிறது. இந்த காலத்தில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் திறமை இருக்கிறது. ஒருவருக்கு நடனம், பாட்டு, என பல்வேறு வகைகளில் திறமைகள் உள்ளது.

உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்று அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். உலக புகழ்பெற்ற எத்தனையோ எழுத்தாளர்களின் முதல் பதிப்புகள் புறக்கணிக்கப்பட்டது தான். அவை தான் இன்று பலரால் விரும்பி படிக்கவும் படுகிறது. என் திறமை என் கனவு மீது நம்பிக்கை இருக்கிறது என்று அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் இது தான் உட்சம் என்றும் எடுத்துக்கொள்ள கூடாது. மென்மேலும் வளர வேண்டும். தன்னம்பிக்கை, உங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.