”காமராஜரின் பிறந்த நாள் எப்படி முக்கியத்துவம் வாய்ந்த நாளாக உள்ளதோ, அதே போல் ஜூன் 22 ஆம் தேதியான உங்கள் பிறந்த நாளும் முக்கியத்துவம் பெற வேண்டும்” என நடிகர் விஜய்-ஐ சந்தித்த மாணவியின் தாய் ஒருவர் கோரிக்கை வைத்தார்.
நான் உங்களை போல் bright student இல்லை. Average student தான் நான் ஒரு நடிகன் ஆகவில்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, என் கனவு சினிமா தான். இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று தோன்ற காரணம் சமீபத்தில் ஒரு படத்தில் அழகான வசனம் கேட்டேன் ” காடு இருந்தால் பிடுங்கி கொள்வார்கள் , காசு இருந்தால் எடுத்து கொள்வார்கள்… ஆனால் படிப்பு மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது…. அது என்னை மிக பாதித்த வரிகளாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல, இது தான் எதார்த்தமும் கூட என்று நடிகர் தனுஷ் படமான அசுரன் பட வசனத்தை கூறினார்.
முழுமையாக கல்வி என்று சொல்கிறோம். பள்ளி கல்லூரி மட்டும் முழுமையான கல்வி இல்லை. ஐன்ஸ்டீன் சொன்னார், பள்ளிக்கு போய் படித்து கற்றுக் கொண்டது மறந்த பின் எஞ்சி இருப்பது தான் கல்வி என்றார். முதலில் புரியவில்லை பின்பு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. எனக்கே புரிகிறது என்றால் உங்களுக்கும் புரியும். Maths, econmics , chemistry தாண்டி மனதில் இருப்பது கேரக்டர், சிந்திக்கும் திறன். மதிப்பெண் grades முக்கியம் தான் characters சிந்திக்கும் திறனுக்கும் முக்கியதுவம் இருக்க வேண்டும்.
படம் கதை சொல்ல தான் கேட்பேன். இப்போது வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். முடிந்தவரை படியுங்கள் அனைத்து தலைவர்களையும், கட்சிகளையும் தெரிந்து கொள்ளுங்கள் அம்பேத்கர், பெரியார் பற்றி படியுங்கள்.காமராஜர் பற்றியும் படியுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டு விடுங்கள். இது தான் இன்றைய செய்தி.
முதலில் உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. எந்த சமூக வலைதள பக்கத்தை பின் தொடர்கிறீர்கள் என்று சொல்லுங்கள், உங்களை பற்றி சொல்கிறேன் என்று ஆகிவிட்டது. இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.








