நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில், ஆதி கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, தேசிய மாணவர் படை மாணவர்கள், தங்களது பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். இதனை ஏற்று, ஆதி கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மகளிர் கல்லூரி மாணவிகள் காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதனை ஆதி கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் சக்திவேல், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் செந்தில் தங்கராஜ், தேசிய மாணவர் படை பட்டாலியன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.







