தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு – இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மணல்மேடு அரசு கலைக் கல்லூரின் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் கடுமையாக…

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மணல்மேடு அரசு கலைக் கல்லூரின் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல மாவட்டங்களில் மாணவ, மாணவியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து  மயிலாடுதுறை மணல்மேடு அரசு கலைக் கல்லூரியின் வாயிலில்  நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று  நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு இந்திய மாணவ சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஸ்ட்ரோ தலைமை வகித்தார். 

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.