முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே தனியார் பள்ளியில் 6 வகுப்பு பயின்று
வரும் மாணவனுக்கு சக மாணவர் குடிக்க கொடுத்த குளிர் பானத்தில் ஆசிட் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகிக்கப்படுகிறது.

குளிர்பானம் குடித்த மாணவன் தொண்டை, குடல், இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு
கேரள பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான
நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுக்கும்மல் பகுதியை சேர்ந்த
சுனில்-சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின், குழித்துறை அருகே
அதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி 6 வகுப்பு பயின்று
வருகிறார்.

சம்பவத்தன்று மாணவன் அஸ்வின் மதியம் உணவு சாப்பிட நிற்கும்போது சக மாணவர் ஒருவர் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். அஸ்வினும் வாங்கி குடித்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு வயிறு வலி எடுத்துள்ளது. தொடர்ந்து பெற்றோர்கள்
மாணவனை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, குளிர்பானத்தில் ஆசிட் தன்மை அதிகம் இருந்ததால், குடல், தொண்டை மற்றும் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா உறுதியானாலே அது ஒமிக்ரான் இல்லை: சுகாதாரத் துறை செயலாளர்

EZHILARASAN D

குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!

EZHILARASAN D

“பாலங்களை கட்டுங்கள், தடுப்புகளை அல்ல!” -ராகுல்

Jayapriya