காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடை பயணம் செய்து வருகிறார் ராகுல்.
அப்போது மைசூரில் நேற்று மாலை அவர் தொண்டர்களிடையே பேசினார். அப்போது இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்தது. எனினும், மழையைப் பொருட்டுத்தாமல் அவர் தொடர்ந்து மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். ராகுல் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மழை, வெயில் இதனால் இந்த யாத்திரை நின்றுவிடாது. தேசப்பிதா மகாத்மா காந்தியை கொலை செய்த சித்தாந்தத்துக்கு எதிரான போராட்டம் தான் இந்த பாரத் ஜோடோ யாத்திரை. மிகவும் கஷ்டப்பட்டு நாட்டு மக்கள் பெற்ற சுதந்திரம், கடந்த 8 ஆண்டுகளில் பறிக்கப்பட்டுவிட்டது. காந்திஜி எப்படி பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக போராடினாரோ, அதேபோல் இன்று நாங்கள் போராடி வருகிறோம். இந்த சித்தாந்தம் கடந்த எட்டு ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை மற்றும் நாம் கடினமாக வென்ற சுதந்திரத்தை பறித்துவிட்டது என்றார் ராகுல்.
இதனிடையே, மைசூரில் ராகுல் மழையில் நனைந்தபடியே உரை நிகழ்த்தியதை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், 2019 இடைத்தேர்தலில் மழையில் நனைந்தபடியே பேசியதை ஒப்பிடுள்ள டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.