மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு… ஏன் தெரியுமா?…

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்… மின்சார…

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்…

மின்சார சட்டத் திருத்த மசோதா தனியார் மின் விநியோகத்திற்கு வழி வகுப்பதாகவும், இதனால், அரசு மின் வாரியத்தின் கட்டமைப்பில் தனியார் பெரு நிறுவனங்கள் பெரும் லாபம் அடையும் என்றும், மின் வாரியம் நலிவடைந்து விடும் என்றும் தெரிவிக்கின்றனர். மின் விநியோகம் தனியார் மயமானால் வீடுகளுக்கான மானியம் கிடைக்காது என்றும், மின் இணைப்பிற்கான கட்டணம் உள்ளிட்டவையும் உயரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கவலை தெரிவிக்கும் அவர்கள், ஏழைகளுக்கு குறைந்த கட்டணம், விவசாயத்திற்கான இலவச மின் விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். மின் விநியோகம் தனியார் மயமானால் பி.எஸ்.என்.எல். போல் மின் வாரியமும் நலிவடைந்து, தனியாருக்கு மட்டுமே லாபம் தரும் ஒன்றாக மாறிவிடும் என்பதால் இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப்பதாக மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.