முக்கியச் செய்திகள் சினிமா

30 நிமிடங்களில் 1M பார்வையாளர்களைக் கடந்த ‘வலிமை’

வலிமை ட்ரெய்லர் வெளியாகி 30 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், பொங்கலையொட்டி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ‘வலிமை’ படத்தின் விசில் தீம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’, ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல்கள் வெளியாகி பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், யுவன் பிஜிஎமில், தீம் மியூசிக் மிரலவைக்கும்படியாக அமைந்துள்ளது.

நீண்ட நாட்களாக காத்திருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை, இன்னும் கொஞ்சம் தூண்டும் வகையில், பல்வேறு தோற்றங்களில் நடிகர் அஜித் தோன்றுவது தீம்யை வெற்றியடைய செய்யலாம். தீம் வெளியான சில மணி நேரத்தில், சில லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக இன்று வலிமை ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்க புத்தாண்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளத. இந்நிலையில் இந்த ட்ரெய்லர் வெளியாகி 30 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக சட்டவிதியை மாற்றுவது அபாயகரமான சூழல் – ஓபிஎஸ் பேட்டி

EZHILARASAN D

அம்மாவிற்கு 2வது திருமணம் ஏன் செய்து வைத்தோம்? : மனம் திறக்கும் சிதார்த்தன் கருணாநிதி

Halley Karthik

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

Web Editor