முக்கியச் செய்திகள்

StoryForGlory; டெல்லியில் பிரமாண்டமாக இறுதி போட்டி நடத்திய DailyHunt

StoryForGlory என்ற போட்டியின் இறுதி போட்டியை டெல்லியில் Daily Hunt நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் நடத்தி 12 வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது. 

daily hunt மற்றும் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்குகள் லிமிடெட் இணைந்து நடத்தும் கவுன்க்ளூ ஸ்டோரி ஃபார் க்ளோரி என்ற போட்டியின் இறுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலிருந்தும் போட்டியார்கள் பங்கேற்றிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் நாடு முழுவதிலிருந்தும் வீடியோ மற்றும் அச்சு ஊடகத்துறையில் 12 வெற்றியாளர்களை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் daily hunt தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக 4 மாதங்களுக்கு முன்பாகவே 1000 போட்டியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் திறமைமிக்க 20 போட்டியாளர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இந்த 20 போட்டியாளர்களும் முன்னணி மீடியாவில், 8 வாரங்கள் நீண்ட கற்றல் நிகழ்ச்சி ஒன்றிலும், 2 வாரங்களுக்கு கற்றல் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றனர்.

இந்த 20 இறுதி போட்டியாளர்களும் தங்களுடைய கற்றல் ஆய்வறிக்கையை சமர்பிக்கும் போது அதிலிருந்து 12 பேரை தேர்வு செய்யும் குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு குழுவில் Daily Hunt Founder வீரேந்திர குப்தா மற்றும் சிஇஓ சஞ்ஜய் புகலியா, ஏம்ஜி மீடியாவின் இயக்குனர் ஆனந்த் கோன்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பவுண்டர் அனுபாமா சோப்ரா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டியாளர்களில் இருந்து படைப்பாற்றல் மிக்க கருத்துக்களை உள்ளடக்கிய செய்தி, டிஜிட்டல் மீடியாவில் செய்திகளை கொண்டு சேர்க்கும் விதம், ஒரு கதையை அதன் வடிவம் மாறாமல் எடுத்துரைப்பவர்கள், பலதரப்பட்ட தரமான கதைகள் எழுதுதல் உள்ளிட்ட பல திறமைகளை ஆய்வு செய்து 12 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து daily huntன் சிஇஓ சஞ்ஜய் புகலியா கூறுகையில், Daily Hunt, அடுத்த தலைமுறை இந்திய வரலாற்றாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள தேவையான சரியான ஆதரவையும் தளத்தையும் அவர்களுக்கு வழங்குவதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக தான் அதிமுகவில் இணையும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

Halley Karthik

’மாணவனை அடிப்பேன் என்றது ஏன்?’ பிரபல நடிகர் விளக்கம்

Gayathri Venkatesan

முதல்வரை அவதூறாக பேசியதாக திமுக எம்.பி., ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!

Halley Karthik