போராட்டத்தில் ஈடுபடும் பேராசிரியர்கள்; வகுப்புகளை புறக்கணித்து ஆதரவு தெரிவித்த மாணவர்கள்

பேராசிரியர்களுக்கு ஆதரவாக 500 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப்   போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். சீர்காழி அருகே பூம்புகாரில் இந்து சமய அறநிலைத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரில் சுயநிதி பிரிவில் சுமார் 40 பேராசிரியர்கள்…

பேராசிரியர்களுக்கு ஆதரவாக 500 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப்   போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

சீர்காழி அருகே பூம்புகாரில் இந்து சமய அறநிலைத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரில் சுயநிதி பிரிவில் சுமார் 40 பேராசிரியர்கள் மற்றும் 500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு கல்லூரியில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை விடக் குறைவான ஊதியம் தருவதாகவும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பேராசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, இன்று பேச்சு வார்த்தை நடத்த வந்த ஜெக வீர   பாண்டியன் மற்றும் மகேந்திரன் என்பவர்கள் பேராசிரியர் கண்ணகி என்பவரை தவறாகப் பேசியதாகத் தெரிவித்து 40 பேராசிரியர் வெளிநடப்புச்  செய்தனர் தொடர்ந்து  உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும்  சுயநிதி பிரிவு  பேராசிரியர்களுக்கு  இடையே நடைபெற்றப் பேச்சு வார்த்தையில்  ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பேராசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

-ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.