“பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார்” – பிரதமர் மோடி புகழாரம்!

ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். அப்போது பேசியவர், “டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை எதிர்காலத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பாடம் உலக நாடுகளுக்கு கற்பிக்க கற்பிக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்களும் பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் இரண்டு முக்கியமான விஷயங்களை நான் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. நமது பண்டைய கல்வெட்டுகள் ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துகள் ஆகியவற்றை பாரத் கேஸ் முழுமையாக எழுத்துகளாக மாற்றி தரும் தொழில்நுட்பமும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவின் AI தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது.

ஆனால் பல்வேறு நாடுகளின் ஜெர்சிகளில் உள்ள பெயர்களை பார்க்கும் பொழுது நாம் அனைவருக்கும் சந்தோஷமாக உள்ளது. கனடா நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்தியாவின் உறுப்பு தான முயற்சிகளில் குழந்தையின் தியாகம் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே போல உறுப்பு தானம் என்பது பலரது வாழ்க்கையை காப்பாற்றி வருகிறது. டிஜிட்டல் அரஸ்ட் என்பது இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது. இது குறித்து பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி உள்ளது.

உயர் அதிகாரி அழைத்து இருக்கிறேன் உங்களது தகவல்களை கொடுங்கள் என யார் தொலைபேசி வாயிலாக கேட்டாலும் உங்களது தகவல்களை எக்காரணத்தைக் கொண்டும் கொடுக்காதீர்கள். உங்களது வங்கிகளை தொடர்பு கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள்.

ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர். பிப்ரவரி 24ம் தேதி அவரது பிறந்தநாள், நான் தமிழ்நாட்டிற்கு எப்பொழுது சென்றாலும் அந்த மாநில மக்கள் அவர் மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன். பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது தேசபக்தி மிகப்பெரியது. குஜராத்தில் நான் முதல்வராக இருந்த பொழுது என் மாநிலத்திற்கு தேவைப்பட்ட போதெல்லாம் உதவிகளை செய்தார். அவருடன் எனது நினைவுகள் இன்னமும் பசுமரத்தாணி போல இருக்கிறது. என்னுடைய முதல்வர் பதவியேற்பு விழா நடந்த பொழுதெல்லாம் அவர் நேரில் வந்து கலந்து கொண்டார்.

ஜெயலலிதா அவர்களுக்கு என் நினைவஞ்சலி. அவர் நாட்டிற்காக ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும். தற்பொழுது தேர்வுகள் நடைபெற்று வருவது எனக்கு தெரியும். அனைத்து மாணவர்களும் தேர்வுக்காக தயாராகி வருகிறீர்கள் தைரியமாக தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் மாணவர்களுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்புடன் இருங்கள்.

தற்பொழுது ரம்ஜான் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைவரும் மகிழ்ச்சியுடன் இதை கொண்டாடி வருகிறோம். என்னுடைய வேண்டுகோள் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்பதுதான். மீண்டும் ஒருமுறை, வரவிருக்கும் பண்டிகைகளுக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.