ஒரு பூனை மளிகைப் பொருட்கள் நிரப்பப்பட்ட பையை திருடி, அதை திருப்பித் தர மறுத்ததோடு எடுக்க முயல்பவரையும் தனது பாதங்களால் அவரது கையைத் தள்ளுவிடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனைகளின் வெவ்வேறு கோமாளித்தனங்களைப் படம்பிடிக்கும் வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை மகிழ்வித்து, சமூகவலைத்தளங்களிலும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில், Reddit இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ‘திருட்டு பூனை’-யின் சில்மிஷ வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பூனை மளிகைப் பொருட்கள் நிரப்பப்பட்ட பையுடன் நாற்காலியின் மேல் அமர்ந்துள்ளது.
அப்போது பூனையின் முன் நிற்கும் ஒரு நபர் அந்த பையை எடுக்க முயற்சிக்கும் போது, அந்த பூனை அதை மறுக்கும் விதமாக , தனது பாதங்களால் அவரது கையைத் தள்ளுகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதோடு, பின்னணியில் கேட்கும் ஒருவரின் அடக்க முடியாத சிரிப்பு நம்மையும் சேர்த்தே சிரிக்க வைக்கிறது.
“என் காதலனின் பூனை அவனது மளிகைப் பொருட்களைத் திருடியது” என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ தற்போது பல லைக்குகளை அள்ளி வருவதோடு, பல நபர்கள் தங்களது விருப்பமான வீடியோவாக பகிர்ந்து தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
My boyfriend's cat stole his groceries
byu/EZ1112 inAnimalsBeingJerks
- பி.ஜேம்ஸ் லிசா








