தமிழ்நாடு சதுரங்க கலாச்சாரம் கொண்ட மாநிலம் என்பதால் தான் ஒலிம்பியாட் போட்டிகளை இங்கு நடத்துவதற்கான திட்டமிட்டோம் என அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு செயலாளர் பரத் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் துவங்கப்பட உள்ள நிலையில், உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர்காடி ஜோகோவிச், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
முதலாவதாக பேசிய சரவ்தேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச், ஒலிம்பியாட் வரலாற்றில் அதிக நாடுகள் அதிக அணிகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக உள்ளது. இந்த ஆண்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உறுதி மொழியாக செஸ் FOR WOMEN என்ற உறுதிமொழிக்கு ஏற்ப அதிக நாடுகள் இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், தமிழ்நாட்டில் தற்போது மிகவும் சிறந்த முறையில் இந்த போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த போட்டியை நடத்துவது இந்திய அரசு. இந்தியா முழுவதிலும் ஒருங்கிணைந்தே இந்த போட்டியானது நடத்தப்படுகிறது. தமிழக அரசு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து பணிகளை இரவு பகல் பாராமல் செய்து முடித்து உள்ளோம். இந்தியாவில் இந்த ஒலிம்பியாட் தொடர் மூலம் புதிய செஸ் புரட்சி ஏற்பட்டு உள்ளது. மேலும் 8 மாத கர்ப்பிணியாக ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை ஹரிக்காவை நினைத்து பெருமை கொள்கிறோம் ,ஹரிகாவின் தைரியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் ஒரு முன்னோடியாக திகழ்கிறார் என கூறினார்.
அவரை தொடந்து பேசிய அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு செயலாளர் பரத் சிங்,
இந்த போட்டியை நடத்துவது இந்திய அரசு. இந்தியா முழுவதிலும் ஒருங்கிணைந்தே இந்த
போட்டியானது நடத்தப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு சதுரங்க கலாச்சாரம் கொண்ட
மாநிலம் என்பதால் தான் ஒலிம்பியாட் போட்டிகளை இங்கு நடத்துவதற்கான
திட்டமிட்டோம் என தெரிவித்தார்.







