கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டி

ஓசூரில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய மாநில அளவிலான கோகோ விளையாட்டு போட்டிகள்: 16 மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 40வது மாநில அளவிலான இளையோர் பிரிவு 18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான…

ஓசூரில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய மாநில அளவிலான கோகோ விளையாட்டு போட்டிகள்: 16 மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 40வது மாநில அளவிலான இளையோர் பிரிவு 18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று (ஜூலை25) துவங்கியது. இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கோ-கோ போட்டிகளில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, சிவகங்கை, ஈரோடு, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

ஓசூர் புனித ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஜூலை25) 40வது மாநில அளவிலான இளையோர் பிரிவு 18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கியன.

பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகத்துடன் தொடங்கிய இந்த கோ-கோ போட்டிகளை பள்ளியின் தாளாளர் ஆஞ்சலா மேரி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்கள் துவக்கி வைத்தனர்.

இந்த கோ-கோ போட்டிகளில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சிவகங்கை, ஈரோடு, திருப்பத்தூர், தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இருந்து வந்த 20 அணிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டிகள் வரும் 26ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு மின்னொளி மற்றும் பகலில் நடைபெறுகிறது.

இந்த போட்டிகள் குரூப் ஏ, பி, சி மற்றும் டி என வகைப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும், சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.