முக்கியச் செய்திகள் உலகம்

ஸ்டார்ஷிப் ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்- எலான் மஸ்க் தகவல்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது. இந்த ஸ்டார்ஷிப், மனிதர்களை பிற கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 டன் சரக்குகளை பூமியின் சுற்றுப்பாதைக்கு ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஸ்டார்ஷிப் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வகையை சேர்ந்த ராக்கெட்டை தான் நாசா, அடுத்த ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக தேர்ந்தெடுத்து உள்ளது. கடந்த மாதம் எலான் மஸ்க், ஸ்டார்ஷிப்பை அடுத்த மாதம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.இந்த நிலையில், அடுத்த மாதம் ஸ்டார்ஷிப் ராக்கெட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மீதமுள்ள சோதனைகள் சரியாக நடந்தால், அடுத்த மாதம் ஸ்டார்ஷிப் தொடங்க முயற்சிப்போம்,” என்று ஸ்டார்ஷிப் பற்றிய பயனரின் ட்வீட்டிற்கு பதிலளித்த மஸ்க் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தென் ஆப்பிரிக்காவுடன் நாளை முதல் டி20-கேரளா வந்த இந்திய கிரிக்கெட் அணி

G SaravanaKumar

அனுபவப் பணியாளர்களுக்கு அடிக்கும் “யோகம்” – IT நிறுவனங்கள் அதிரடி முடிவு!

Web Editor

தன்னிச்சையாக விடுமுறை-987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

Web Editor