அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம் ஒன்று உலகின் அதிவேக காரை தயாரித்து அசத்தியிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல உலக சாதனைகளையும் தகர்க்த்தெறிந்துள்ளது.
வெறும் 24 ஊழியர்களுடன் SSC North America என்றழைக்கப்படும் ஆட்டோமொபைல் நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 1998ம் ஆண்டு Shelby SuperCars Inc. என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தயாரித்துள்ள SSC Tuatara என்ற பந்தய மாடல் கார், உலகின் அதிவேக கார் என்ற உலக சாதனையை படைத்திருந்த Bugatti Chiron Supersport 300+ காரின் சாதனையை முறியடித்திருக்கிறது.

இதன் மூலம் தயாரிப்பில் உள்ள உலகின் அதிவேக மாடல் என்ற உலக சாதனையையும் SSC Tuatara தன்வசமாக்கியிருக்கிறது. லாஸ் வேகாஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஆலிவர் வெப் எனும் அனுபவ ஓட்டுநர் இக்காரை மணிக்கு 508.73 கிமீ வேகத்தில் செலுத்தியிருக்கிறார். முன்னதாக Bugatti Chiron Supersport 300+ கார் 490.48 கிமீ வேகத்தில் சென்றதே அதிவேக சாதனையாக இருந்தது.
இக்காரில் ட்வின் டர்போ 5.9 லிட்டர் வி8 எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 1,750 hp பவரை வழங்குகிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இக்காரின் எடை 1,247 கிலோவாகும்.

உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்ததுடன் மேலும் 3 சாதனைகளையும் இக்கார் தகர்த்தெறிந்துள்ளது. அவை
01. “Fastest Flying Mile on a Public Road” at 313.12 mph (503.92 kph)
02. “Fastest Flying Kilometre on a Public Road” at 517.16 kph
03. “Highest Speed Achieved on a Public Road” at 532.93 kph
உலகின் அதிவேக கார் என்பதால் மொத்தமே 100 என்ற எண்ணிக்கையிலான SSC Tuatara கார்களை தயாரிக்க SSC North America நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இக்காரின் விலை 1.6 மில்லியன் டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாய்க்கு சற்று அதிகம்.







