ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா –  சுவாமி தங்க வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு மூன்றாம்
நாள் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் – ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று ஸ்ரீ ஆண்டாள் – ரெங்க மன்னார் தங்க நாற்காலி வாகனத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இதில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் முழுங்க ரத வீதிகள் முழுவதும் உலா வந்தனர்.  பக்தர்கள் ஸ்ரீ ஆண்டாளையும் ரெங்க மன்னரையும் தீபா ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.  முன்னதாக நேற்று காலை கோயில் வளாகத்தில் உள்ள சிங்கம்மாள் குரடு மண்டபத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.