ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகரில் பந்தா செளக்கில் உள்ள சேவான் பகுதிக்கு அருகே காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 14 காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிகச்சை பலனளிக்காமல் மேலும் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி, ஜம்மு காரஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த காவலர்களின் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய காஷ்மீர் காவல்துறை ஜெனரல் விஜய் குமார், “இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டு பயங்கரவாதிகளும் ஒரு உள்நாட்டு பயங்கரவாதியும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் இதில் ஈடுபட்டவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” தெரிவித்துள்ளார்.









