ராஜபக்ச அரசு பதவி விலககோரி வலுக்கும் போராட்டம்

இலங்கையில் ராஜபக்ச அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் பெரும்…

இலங்கையில் ராஜபக்ச அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி
மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளான அந்நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு வெகுவாக குறைந்தது. பிற நாட்டு கரன்சிக்கு இணையான இலங்கையின் கரன்சி மதிப்பும் வெகுவாக குறைந்தது. இதனால், அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள்
விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் பதவி விலக கோரி போராட்டங்கள் நடைபெற்று
வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தலைநகர் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தி நேற்று களுத்துறையில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான கண்டன பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.