நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்திய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி பண்டிகை கருதப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹோலி கொண்டாட்டங்கள்…

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

வட இந்திய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி பண்டிகை கருதப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹோலி கொண்டாட்டங்கள் பெருமளவில் இல்லாமல் இருந்தது. இந்தாண்டு பெருந்தொற்று பாதிப்பு குறைந்ததால், பண்டிகை களைக்கட்ட தொடங்கியிருக்கிறது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஹோலியின் நகரம் என்றழைக்கப்படும் பிருந்தாவனத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஹோலி பண்டிகையின் கொண்டாட்டங்கள் தொடங்கின. நேற்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுக்கூடி வண்ணங்களை ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டு மகிழ்ந்தனர். இதையடுத்து இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.