33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்த அதிபர் – காரணம் என்ன தெரியுமா?

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர். இலங்கை நெருக்கடியைத் தீர்க்க புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பினார். அவர் தற்போது கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கியுள்ளார். பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பங்களாவை சுற்றி பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரை பாதுகாக்கும் வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதற்கிடையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று கோத்தபய ராஜபக்ச தங்கி உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் 2 பேரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் விரைவில் 12 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். இதில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நமல் ராஜ பக்சவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் மீண்டும் இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை தூக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading