இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் 17 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ உருளை கிழங்கு 300 ரூபாய்க்கும், ஒரு ஆப்பிள் 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படடுள்ளனர். இதனை கண்டித்து அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேவை தவிர அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ததையடுத்து 3 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இன்று 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அதன்படி, தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சரவை பதவியேற்றப்பின் பேசிய கோத்தபய ராஜபக்சே, தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் அளவு சிறிதாக இருந்தாலும், அரசு பாதிப்பில்லாமல் இயங்கும். இழந்த பொருளாதாரத்தை தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை மீட்டு எடுக்கும் எனவும் கோத்தபய கூறியுள்ளார். மேலும் நாளை அமைச்சரவை கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைச்சரவையில் சமல் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, நாமல் ராஜபக்சே மற்றும் ஷசீந்திர ராஜபக்சே ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.