நாளை இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர்..!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா அக்டோபர் 16-18, ஆகிய இரு நாட்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமராக பதவியேற்ற பின் ஹரிணி அமரசூரியா மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,  இந்தியா வரும் ஹரிணி அமரசூரியா இரு நாட்டு நலன் சார்ந்த இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதிகிறார்.

மேலும் டெல்லியில் நடைபெறும் தனியார் ஊடகத்தின் உலக உச்சி மாநாட்டில்  சிறப்புரை ஆற்றுகிறார். அத்துடன் இலங்கையின் கல்வி அமைச்சராகவும் இருக்கும் டாக்டர் ஹரிணி அமரசூரியா, டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மற்றும் NITI ஆயோக் ஆகியவற்றிற்கு செல்கிறார்.

இந்த பயணம் இந்தியா மற்றும்  இலங்கை இடையிலான  இருதரப்பு உறவுகளை மேம்படுத்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.