வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

வேதாரண்யம் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அடுத்த ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து  சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன் மற்றும் செல்வ கிருஷ்ணன்…

வேதாரண்யம் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அடுத்த ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து  சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன் மற்றும் செல்வ கிருஷ்ணன் ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழிமறித்து
படகில் ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பிறகு படகிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஜீபிஎஸ் கருவி , செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களையும், மீன்பிடி வலைகலையும் வெட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு!

பின்னர், 4 மீனவர்களும் அவசரமாக கரைக்கு திரும்பினர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.