12 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை மீறி மீன் பிடித்ததாக 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடக்கு தலைமன்னார் அருகே நேற்று இரவு ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இரண்டு படகுகளில் சென்றிருந்த 12 மீனவர்கள்…

எல்லை மீறி மீன் பிடித்ததாக 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு தலைமன்னார் அருகே நேற்று இரவு ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இரண்டு படகுகளில் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பேசிய இலங்கை கடற்படையினர், இலங்கை அருகே வடக்கு தலைமன்னார் பகுதியில் எல்லை மீறி வந்து மீன்பிடித்த 12 மீனவர்களை கைது செய்துள்ளோம். இரண்டு படகுகளில் வந்திருந்த 12 பேரை கைது செய்ததோடு படகுகளையும் கைப்பற்றியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

இந்த ஒரே மாதத்தில் இலங்கை கடற்படையினர் மூன்றாவது முறையாக இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். பிப். 1ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 மீனவர்களையும், 8ம் தேதி 3 படகுகள் உட்பட 11 மீனவரகளையும் இலங்கை கடற்படை கைது செய்தனர். இரு நாடுகளுக்கிடையேயான இந்த எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் அதிகம் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.