மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தியும் இலங்கை தமிழர் பகுதிகளில் கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 29ஆம் தேதி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகளுக்காகக் குழி தோண்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மனித எச்சங்கள் மற்றும் சில ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வீதியோரத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள், பெண்களின் ஆடைகள் காணப்பட்டன.
இதனையடுத்து அந்த குழியை ழுழுமையாக தோண்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். கடந்த 6ஆம் தேதி குழிகள் தோண்டும் பணி ஆரம்பமான நிலையில் திடீரென நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தியும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கடையடைப்பு, பேரணி நடைபெற்று வருகிறது.







