மலையாள சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது பலராலும் விரும்பப்படும் நடிகராக வலம் வருகிறார் துல்கர். இவரது பிறந்தநாளான இன்று, அவரின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்த படம் தான் முதன் முதலாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சூர்யாவின் படமாகும், ஆனால் இறுதியில் படம் தேர்வாகாமல் போனது.
‘சூரரை போற்று’ வெற்றிக்கு பின்னர் மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். கங்குவா படத்தில் சூர்யா பிசியாக நடித்துக்கொண்டு இருப்பதால் இந்த படத்தின் பணிகள் தொடங்க கால தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லேட்டஸ்டாக வெளியாகியுள்ள தகவலின்படி, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுடன், துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கரை நடிக்க வைக்க அணுகியதாகவும். அதற்கு அவர் இந்த படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அடுத்த படத்திற்கான பணிகள் குறித்து சுதா கொங்கரா மற்றும் சூர்யா இருவரும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குநர் சுதா கொங்கரா அக்ஷய் குமாரை வைத்து சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.







