முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையில் 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

இலங்கையில் 4 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வந்தன. இதை அடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். எனினும், அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக 4 பேர் அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் அவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிசும், பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும், சக்தி மற்றும் ஆற்றல் அமைச்சராக காஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி: பள்ளிக் கல்வித்துறை

Arivazhagan CM

5 நாள் ஊரடங்கில் இவ்வளவு தொகையா வசூல்?

தடுப்பூசி குறித்து அதிமுக விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan