முக்கியச் செய்திகள் சினிமா

14 பிரிவுகளில் தேர்வாகியுள்ள ஸ்க்விட் கேம் – விருது பெறுமா ?

உலக அளவில் புகழ்பெற்ற ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் 14 பிரிவுகளின் கீழ் எம்மி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தென்கொரிய இணையத் தொடரான ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.  குழந்தைகளின் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இணைய தொடர் தான் ஸ்க்விட் கேம். ஹ்வாங் டாங் – ஹியூக் இந்த தொடரை இயக்கி இருந்தார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடரை இன்று வரை 1.70 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் டிவி நிகழ்ச்சிகளின் ஆஸ்கார் என அழைக்கப்படும் எம்மி விருதுக்கு ஸ்க்விட் கேம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தொலைக்காட்சி மற்றும் வெப் தொடர்களுக்கு வழங்கப்படும் எம்மி விருது நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான எம்மி விருதுகளில் சிறந்த துணை நடிகர், சிறந்த முன்னணி நடிகர் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஆங்கிலம் அள்ளாத வேற்று மொழி வெப் தொடரான ஸ்க்விட் கேம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 74வது எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 12 ஆம் தேதி கலிபோர்னியாவில் நடைபெற உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்குவிட் கேம் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாம் சீசன் விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம். ஒரே நேரத்தில் விருது பரிந்துரை மற்றும் அடுத்த பாகம் என  இரண்டு மகிழ்ச்சியான செய்திகளால் ஸ்க்விட் கேம் ரசிகர்கள் திகைத்துப்போய் உள்ளனர்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூரிய கிரகணம்; நாளை திருப்பதி கோவில் நடை அடைப்பு

G SaravanaKumar

2020ம் ஆண்டில் ட்விட்டரை கலக்கிய ட்வீட்கள் மற்றும் ஹேஷ்டேக்குகள்!

Jayapriya

சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசம்- காயத்ரி ரகுராம்

Web Editor