பள்ளி ஆசிரியருக்கு எதிராக போஸ்டர் ஓட்டப்பட்ட விவகாரம்; முதன்மை கல்வி அதிகாரி விசாரணை…

சிவகங்கையில் அரசு பள்ளி ஆசிரியருக்கு எதிராக போஸ்டர் ஓட்டப்பட்ட விவகாரம் குறித்து முதன்மை கல்வி அதிகாரி பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், கண்டனி கிராமத்தில் உள்ள அரசு…

சிவகங்கையில் அரசு பள்ளி ஆசிரியருக்கு எதிராக போஸ்டர் ஓட்டப்பட்ட விவகாரம் குறித்து முதன்மை கல்வி அதிகாரி பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.

நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், கண்டனி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர் குறித்து அவதூறு தெரிவிக்கும் வகையில், ஆசிரியர் தின வாழ்த்துகள் என்று மர்மநபர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளியில் விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் ஆண் ஆசிரியர் ஒருவரே தனது சொந்த காரணங்களுக்காக இதுபோல் போஸ்டர் ஒட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.